புதிய தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்த நடவடிக்கை! ஜனாதிபதி வெளியிட்ட செய்தி..!

ஜனாதிபதி வெளியிட்ட செய்தி..!

வாக்குறுதி அளித்தபடி இலங்கையில் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு புதிய தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவத்தின் 72 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு இராணுவத்தினர் மத்தியில் உரையாற்றும்போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இடம்பெறும் ஊழல் மற்றும் மோசடிகளை கட்டப்படுத்த அனைத்து அதிகாரிகளும் அர்ப்பணிப்புடன் மக்களுக்காக பணியாற்றவேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.  

நாட்டில் கடந்த 3 வருடங்களாக மூன்று படைப்பிரிவுகள் மற்றும் புலனாய்வு சேவைகளின் கட்டமைப்பை வலுவாக்கியதன் மூலம் தேசிய கடமைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் நாட்டில் மீண்டும் பயங்கரவாத அல்லது மதத் தீவிரவாதம் நிகழாமல் இருக்கும் வகையில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.