வீட்டில் கொள்ளைக்காரர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி பெண் ஒருவர் பலி..!

image_pdfimage_print

பெண் ஒருவர் பலி…!

மல்வத்துஹிரிபிட்டிய, பிட்டுவல்கொட பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்த கொள்ளைக்காரர்கள் அங்கிருந்த இரு பெண்களை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (09) அதிகாலை இவ்வாறு வீட்டிற்குள் நுழைந்த கொள்ளைக்காரர்கள், வீட்டில் இருந்த பெண்களை தாக்கி அவர்களது கை, கால்களை கட்டிவிட்டு வீட்டில் கொள்ளையடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலில் மயக்கமடைந்த பெண்ணை கம்பஹா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

77 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.