எரிந்து நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு..!

எரிந்து நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு..!

ஹங்வெல்ல பகுதியில் எரிந்து நிலையில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலம் நேற்று (10) காலை ஹங்வெல்லவில் விடுதி ஒன்றின் அருகே மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நுகேகொட பகுதியை சேர்ந்த 70 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட நபர் நேற்று (09) மாலை முதல் குறித்த விடுதியில் தங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.