சஜித்தை சந்திப்புக்கு அழைப்பு விடுத்த கோட்டாபய…!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…

கலந்துரையாடலுக்கு வருமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

எனினும் அந்த அழைப்பிற்கு நிபந்தனையுடன் இணக்கம் வெளியிட ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் மேற்கொள்ள இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

எனினும் ஜனாதிபதி செயலக தகவல் வட்டாரங்களுக்கமைய, “நீங்கள் ஏன் அரசாங்கத்தின் சேதன பசளை விவசாயத்தை விமர்சிக்கின்றீர்கள்? இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதால் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைப் பாருங்கள்” என ஜனாதிபதி வினவியுள்ளார்.

“சேதன பசளை விவசாயத்திற்கு தான் அல்லது கட்சியினர் ஒருபோதும் எதிர்ப்பு வெளியிடவில்லை. அது தொடர்பில் வெளியாகும் தகவல்களுக்கே எதிர்ப்பு வெளியிடுகின்றோம்” என சஜித் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி, எதிர்க்கட்சி தலைவரை தொடர்பு கொண்ட பின்னர் அந்த கட்சியின் செயலாளரான ரஞ்ஜித் மத்தும பண்டாரவுக்கு ஜனாதிபதி அழைப்பேற்படுத்தியுள்ளார், சேதனபசளை விவசாயம் தொடர்பில் வினவியுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.