சமையல் எரிவாயுவின் விலை பாரியளவில் அதிகரிப்பு..!

எரிவாயுவின் விலை பாரியளவில் அதிகரிப்பு..!

லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை நேற்று அதிகரித்த நிலையில் லாப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளன.

அதன்படி 12.5 கிலோ கிராம் லாப்ஸ் எரிவாயுவின் விலை 2840 ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் 5 கிலோ கிராம் லாப்ஸ் எரிவாயுவின் விலை 1136 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

லிற்றோ நிறுவனத்தின் 12.5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1257 ரூபாவினால் நேற்று உயர்த்தப்பட்டிருந்தது.

மேலும் இந்நிலையில் இன்றையதினம் லாப்ஸ் நிறுவனம் தனது எரிவாயுவுக்கான விலையை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.