வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்;பரிதாபமாக பலியான 20 வயது இளைஞன்..!

மட்டக்களப்பில்…!

மட்டக்களப்பில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முகத்துவாரத்திலிருந்து மட்டக்களப்பு செல்லும் வழியில் மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற இவ்விபத்தில் கருவேப்பங்கேணி பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த இரு இளைஞர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.