இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய யொஹானி;மக்களின் அமோக வரவேற்பு..!

image_pdfimage_print

யொஹானி…

இந்திய இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக இந்தியா நோக்கிய பயணித்த யொஹானி த சில்வா மீண்டும் இலங்கை திரும்பியுள்ளார்.

நேற்றைய தினம் (12) இரவு 11.25 மணியளவில் மும்பையில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றின் மூலம் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இந்த நிலையில் விமான நிலையத்தில் வைத்து அவரை மக்கள் பூ மாலை அணிவித்து வரவேற்றிருந்தனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தனக்கு அதிகளவான எதிர்ப்பார்ப்புகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் அவரது இந்திய பயணத்தின் போது இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ் மற்றும் பாடலாசிரியர் மதன் கார்க்கி ஆகியவர்களையும் சந்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.