சரமாறியாக ஏறிய சமையல் எரிவாயுவின் விலை..! தெற்காசியாவில் சாதனை புரிந்த இலங்கை..!!

சமையல் எரிவாயுவின் விலை..!

தெற்காசியாவிலுள்ள எந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விலை இலங்கையிலேயே அதிகமாக உள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

புள்ளிவிவரங்களுக்கமைய, உலகச் சந்தையில் எரிவாயு விலை அதிகரித்த போதிலும், இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பூட்டான் போன்ற தெற்காசிய நாடுகளின் விலைகள் இலங்கையை விட குறைவாக உள்ளன.

தற்போது இந்தியாவில் 14.2 கிலோ கிராம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 884 இந்திய ரூபாயாகும். அதன் இலங்கை பெறுமதி 2,352.77 ரூபாயாகும்.

லக்னோ நகரில் எரிவாயு சிலிண்டர் விலை 922.50 இந்திய ரூபாயாகும். அதன் இலங்கை பெறுமதி 2,453.85 ரூபாய் ஆகும்.

பங்களாதேஷில் 12.5 கிலோ கிராம் எரிவாயுவின் விலை 5,917 டாக்கா என கூறப்படுகின்றது. அதன் இலங்கை பெறுமதி 1,381.69 ரூபாயாகும்.

நேபாளத்தில் 14.2 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 1,450 நேபாள ரூபாவாகும். அதன் இலங்கை பெறுமதி 2,407 ரூபாயாகும்.

பூட்டானிலும், உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை பூட்டான் நாணயமான 982 பிடிஎன் ஆகும். இதன் இலங்கை பெறுமதி 2,612.12 இலங்கை ரூபாயாகும்.