தூக்கில் தொங்கிய 11 வயது சிறுவன்..!!கதறி அழும் தந்தை!

தூக்கில் தொங்கிய சிறுவன்..!

இலங்கையில் கொரோனா தொற்று பரவலால் கடந்த இரு வருடங்களாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களில் கல்வி பெரிதும் பாதிப்படைத்துள்ளது. இருப்பினும் ஒன்லைன் படிப்பின் மூலம் மாணவர்களுக்கு தற்போது பாடசாலைகள் கல்வி கற்பித்து வருகின்றனர்.

குன்கமுவ பிரதேசத்தில் தந்தை ஒரு தன் மகனின் ஒன்லைன் வகுப்பிற்காக போன் வாங்கிக் கொடுத்துள்ளார். பின்னர் மகனின் ஒன்லைன் வகுப்பு நின்று விட்டது. அதற்கு பின்னர் மகன் போனில் கேம் விளையாட கொண்டிருந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் தந்தைக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

குறித்த சம்பவம் பண்டாரகம, ரய்கம, குன்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 11 வயதான இருசு அஷேன் என்ற சிறுவனே தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனத்தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இச்சமபவம் தொடர்பில் அவரது தந்தை தெரிவித்தது,

தந்தை வெற்றிலைக் கூறு விற்கும் தொழிலை மேற்கொண்டு வந்துள்ளார். வழக்கம்போல வேலை செய்துவிட்டு விட்டிற்கு வந்த தந்தை மகனை அழைத்துள்ளார்.

எனினும் மகன் அதற்கு பதிலளிக்கவில்லை. பின்னர் தந்தை மாணவன் அறைக்கு சென்று பார்த்துள்ள்ளார் ஆனால் மகன் அங்கு இல்லை. பின்னர் சமையல் அறைக்கு சென்று பார்த்த போது, மகன் கொங்கிரீட் தூண் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த மகனை 5 நிமிடங்களில் மீட்டு ஹொரனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது மகன் இறந்து விட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சிறுவனின் திடீர் மரணம் தொடர்பில் பாணந்துறை குற்றவியல் பிரிவு மேற்கொண்ட விசாரணையில் கைப்பேசி விளையாட்டுக்களுக்கு மாணவன் அடிகையாகியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை உயிரிழந்த சிறுவனின் சடலம் ஹொரணை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் திடீர் மரண பரிசோதகர் சுமேத குணவர்தன முன்னிலையில் பிரேத பரிசோதனை இடம்பெற்றுள்ளது.