வவுனியாவில் நடந்த விபத்து: பெண் ஒருவருக்கு நேர்ந்த சோகம்..!

வவுனியாவில் நடந்த விபத்து…

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் செவ்வாய்கிழமை மாலை 6.40 மணியளவில் வவுனியா – மன்னார் பிரதான வீதி புதிய சாளம்பைக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

பிளசர் ரக மோட்டார் சைக்கிள் ஒன்று வவுனியா நகர் நோக்கி சென்று கொண்டிருந்த உழவியந்திரம் புதிய சாளம்பைக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதனை முந்தி செல்ல முயன்ற நிலையில் உழவியந்திரத்தின் கலப்பையில் மோதுண்டு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 34 வயதுடைய வெளிக்குளத்தை சேர்ந்த பெண்ணொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து பூவரசங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.