பால்மா தொடர்பில் வெளியான புதிய செய்தி..!

பால்மா தொடர்பில்…

நாட்டில் இந்த வார இறுதியில் பால்மாவை தட்டுப்பாடின்றி சந்தைகளில் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பால்மா வர்த்தக சங்கத்தின் முக்கியஸ்தர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் 800 தொன் பால்மா தட்டுப்பாடு தற்போது சந்தையில் நிலவுவதாகவும் மட்டுப்படுத்தப்பட்ட தினத்தில் ஒரு தடவை பால்மாவை சந்தைக்கு விநியோகிக்க முடியாதுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் நாட்டில் 8 கொள்கலன் பால்மா விடுவிக்கப்படுவதாக துறைமுகங்கள் தெரிவித்துள்ளனர்.