கட்டுப்பாட்டை இழந்து பயணித்த கார்..! இருவர் பலி!!

கோர விபத்து…!

மீகஹவத்த தெல்கொட பகுதியில் சாரதியின் கவனயீனம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று நான்கு வாகனங்கள் மீது மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.

குறித்த கார் நிர்மாணப்பணியில் இருக்கும் பாலம் ஒன்றில் இருந்த பீப்பாய் ஒன்றில் மோதிய பின்னர் முன்னால் வந்த இரண்டு முச்சக்கரவண்டிகளிலும், மோட்டார் சைக்கிள் ஒன்றிலும் மற்றும் லொறி ஒன்றிலும் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதில், முச்சக்கரவண்டி ஒன்றின் சாரதி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஆகியோர் படுகாயம் அடைந்த நிலையில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் ஹோமாகம மற்றும் கம்பஹா பிரதேசங்களை சேர்ந்த 31 வயது மற்றும் 38 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.