வவுனியாவில் இடம் பெற்ற கொடூர சம்பவம்! மனைவியை எரித்து கொலை செய்த கணவன்..!

image_pdfimage_print

வவுனியாவில்…!

வவுனியா – பூவரசன்குளம், கற்பகப்புரம் பிரதேசத்தில் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில் தனது மனைவியைத் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவ தினத்தன்று கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட தகராறில், தாக்குதலுக்குள்ளான மனைவி மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து சந்தேகநபர் தனது மனைவியின் உடல்மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீ மூட்டியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பூவர்சன்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கற்பகப்புரத்தைச் சேர்ந்த 43 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.