விபத்தில் இளைஞன் ஒருவர் மரணம்…!

விபத்தில் இளைஞன் ஒருவர் மரணம்…!

பகமுன, லக்கல வீதியின் 26 – 27 கிலோ மீற்றர் கட்டை பகுதியில் லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகி இளைஞர் ஒருவர் மரணம்.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த நபர் பொலன்னறுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் 31 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் லொறியின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.