தந்தையுடன் சேர்ந்து நீரில் மூழ்கிய பிள்ளைகள்..!அரங்கேறிய சோக சம்பவம்..!!

நீரில் மூழ்கி மூவர் பலி..!

நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நேற்று (20) புதன்கிழமை பிற்பகல் வெல்லவாய – எல்லவல பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இச்சம்பவத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த தந்தையும், அவரது பிள்ளைகள் இருவருமே உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவத்தில் 38 வயதான தந்தை, 15 வயதான மகன் மற்றும் 11 வயதான மகள் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.