மின்னல் தாக்கி 12 வயது சிறுமி மரணம் ..!

குருநாகலில்…!

குருநாகல் – மஹவ பகுதியில் மின்னல் தாக்கீ 12 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அந்த பகுதியில் நேற்று சீரற்ற வானிலை நிலவி வந்துள்ளது. இந்த நிலையில் பன்வெள, பலல்ல பிரேதேசத்தை சேர்ந்த சிறுமியை இவ்வாறு ஏற்பட்ட மின்னல் தாக்குதலில் உயிரிழந்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.

குறித்த சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் சிறுமி தனது வீடு வளாகத்தில் நின்று கொண்டிருந்த சமயத்தில் அவர் மின்னல் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். அதனையடுத்து எரிகாயங்களுடன் நாகொல்லாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் பிரேத பரிசோதனைக்காக நாகொல்லாகம வைத்தியசாலையில் சிறுமியின் சடலம் வைக்கப்பட்டுள்ளது.