இலங்கையர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய வினோத திறமையுள்ள சிறுவன்!

image_pdfimage_print

இரு கைகளும் இல்லாத குறை இரண்டு கால்களிலும் திறமை


ஹங்குரன்கெத்த பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ரூக்வூட் தோட்டம் ஹேவாஹெட்ட நகரில் இருந்து சுமார் ஏழு கிலோ மீற்றர் தொலைவில் மலை உச்சியில் காணப்படும் தேயிலை தோட்டமாகும்.

இத்தோட்டம் முதலாம் இரண்டாம் மூன்றாம் பிரிவு என மூன்று பிரிவுகளை உள்ளடக்கியது .

இங்கு முன்றாம் இலக்க லயன் குடியிருப்பு தொகுதியில் வசிக்கும் வினோத திறமையுள்ள சிறுவன்தான் சஞ்ஞீவன்.

பிறப்பில் இரண்டு கைகளும் அற்ற நிலையில் 2013.05.05 கண்டி வைத்திய சாலையில் பிறந்த போதும். இறைவன் கொடுத்த இரு கால்களினால் தனது அனைத்து கடமைகளை பூர்த்தி செய்து வரும் திறமை படைத்தவன்.

தனது தந்தை தலைநகரத்தில் கூலி தொழில் செய்து வரும் நிலையில் தாயார் தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.

இரு சகோதரிகளுக்கு ஒரே ஒரு சகோதரனான சஞ்சீவன் ரூக்வூட் தமிழ் வித்தியாலையத்தில் தரம் மூன்றில் கல்வி பயின்று வரும் ஒரு திறமைசாலி மாணவன் தனது இரு கால்களினால் முத்து போன்ற மூன்று மொழிகளிலும் எழுதுவதிலும் சித்திரம் வரிவதிழும் வல்லவன்.

ஏனைய பல விளையாட்டு திறமைகளை அவனது கால்கள் மூலம் காட்டும் திறமை அப்பிரதேச மக்களை ஆனந்தமடைய வைக்கிறது.