பிரித்தானியா செல்ல காத்திருப்போருக்கான முக்கிய அறிவித்தல்!

பிரித்தானியா செல்ல காத்திருப்போருக்கான முக்கிய அறிவித்தல்

முழுமையாக தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட இலங்கையர்கள் பிரித்தானியாவுக்குள் வர அனுமதி முழுமையான கோவிட் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட இலங்கையர்கள் பிரித்தானியாவுக்கு விஜயம் செய்ய எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

பிரித்தானியாவில் அங்கீகரிக்கப்பட்ட கோவிட் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களுக்கு மாத்திரமே இந்த அனுமதி வழங்கப்படும் எனவும் உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

Oxford/AstraZeneca,Pfizer, BioNTech,Moderna,Janssen ஆகிய தடுப்பூசிகளையே பிரித்தானிய அங்கீகரித்துள்ளது.

இந்த தடுப்பூசிகளை முழுமையாக செலுத்திக்கொண்டவர்கள் பிரித்தானியாவுக்கு பயணம் செய்ய தகுதி பெறுவார்கள் என உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

பிரித்தானியா செல்லும் பயணிகள் 14 நாட்களுக்கு முன்னர் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.