இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற போவது இவர் தான்.! உறுதியாக வெளியான தகவல்.!

பிக்பாஸ் 5

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனும் மிகவும் சுறுசுறுப்பாகவும், சுவாரசியமாகவும் நடைபெறும். தற்போது பிக்பாஸ் வெற்றிகரமாக 4 சீசன்களை கடந்து 5 வது சீசனில் அடி எடுத்து வைத்துள்ளது.

பிக் பாஸ் 5 ஆரம்பிப்பதற்கு முன்பாகவே பல்வேறு ரகசியங்களை சமூகவலைதளத்தில் கிளிக் செய்துவிட்டனர். தற்போது இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் வீட்டிற்குள் சென்றனர். இதில் கடந்த வாரம் முதல் வாரம் என்ற காரணத்தால் போட்டியாளர்கள் யாரும் வீட்டில் இருந்து வெளியேற்ற படவில்லை.

ஆனால் மூன்றாம் பாலினமாக நமிதா மாரிமுத்து மட்டும் தனிப்பட்ட காரணங்களுக்காக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார். இந்த நிலையில், இந்த வார எலிமினேஷன் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பிரியங்கா, இசைவாணி, அண்ணாச்சி, அக்ஷரா, நதியா, அபினய், சின்ன பொண்ணு உள்ளிட்டோர் நாமினேட் செய்யப்பட்டிருக்கின்றனர்.

இவர்களில் குறைவான வாக்குகளை பெற்றவர் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார்கள். இத்தகைய நிலையில் தற்போது குறைவான வாக்குகளைப் பெற்றது யார் என்பது குறித்த தகவல் லீக்காகியிருக்கிறது.

அதாவது அபினை மற்றும் சின்ன பொண்ணு இருவரும் மற்ற போட்டியாளர்களை விட குறைவான வாக்குகளே பெற்றுள்ளதாகவும் எனவே இவர்களில்ஒருவர் கட்டாயம் வெளியேறுவார் என்றும் இதில் சின்ன பொண்ணு நிகழ்ச்சியில் இருந்து வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.