திருமணமாகி மூன்று தினங்களில் நிகழ்ந்த பெரும் சோகம்.. கதறும் உறவுகள்.!

புதுமண தம்பதி விபத்தில் பலி

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் குமார். இவர் மருந்து விற்பனை செய்யும் பிரதிநிதியாக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும், தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை மருத்துவர் கார்த்திகாவுக்கும் கடந்த 28 ஆம் தேதி திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

திருமணத்திற்குப் பின்னர் பெருங்குளத்தூரில் மறு வீட்டிக்கு சென்ற மனோஜ்குமார் – கார்த்திகா தம்பதி, நேற்று இரவு நேரத்தில் அரக்கோணத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

சென்னை – அரக்கோணம் தேசிய நெடுஞ்சாலையில் கூவம் பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது, எதிர் திசையில் அரக்கோணத்தில் இருந்து சென்னையை நோக்கி லாரி ஒன்று வந்துள்ளது.

இந்த லாரி வேகமாக வந்து வளைவில் திரும்ப முயற்சிக்கும் போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, பக்கவாட்டுப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த கார் மீது கவிழ்ந்து உள்ளது.

இதில் லாரிக்கு அடியில் சிக்கிக்கொண்ட கார் அப்பளம் போல நொறுங்கிய நிலையில், காருக்குள் இருந்த புதுமண தம்பதிகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த மப்பேடு காவல்துறையினர், 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் லாரியை அப்புறப்படுத்தி இருவரின் உடலையும் மீட்டு திருவள்ளூர் அரசு மருதுவமனை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.