15 வயது சிறுமி கர்ப்பம்.. கண்ணீர் பரிதவிப்பில் பெற்றோர்கள்.!

தமிழ்நாடு

பத்தாம் வகுப்பு பயின்று வரும் சிறுமியை காதலித்து ஏமாற்றி கர்ப்பமாக்கிய கேசவ சர்மா போக்ஸோவில் கைதாகியுள்ளான்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை பத்ரகாளியம்மன் லே அவுட் பகுதியை சார்ந்தவன் கேசவ சர்மா (வயது 22). இவன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறான்.

இவன், அப்பகுதியை சார்ந்த 10 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவியை காதல் வலையில் வீழ்த்தி காதலித்து வருவதாக நடித்துள்ளார். பின்னர், சிறுமியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி அத்துமீறி இருக்கிறான். இதனால் 15 வயது சிறுமி கர்ப்பமான நிலையில், இதுதொடர்பான விஷயத்தை கேசவ வர்மாவிடம் தெரியப்படுத்திய சிறுமி, தன்னை உடனடியாக திருமணம் செய்துகொள்ள கூறியுள்ளார்.

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த கேசவ வர்மா, சிறுமியை விட்டு பிரிய தொடங்கியுள்ளான். சிறுமியும் வீட்டில் தகவலை தெரியப்படுத்தாமல் இருந்த நிலையில், அவரின் வயிறு நாளடைவில் பெரியதாக தொடங்கியுள்ளது.

இதனைக்கண்டு சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர் அவரிடம் விசாரிக்கவே, கேசவ வர்மனின் பெருங்கொ.டூர செயல் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சிறுமியின் தாய் உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், போக்ஸோ சட்டத்தின் கீழ்  கேசவ வர்மனை கைது செய்தனர். மாணவி திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார்.