இலங்கையில் மீண்டும் பாடசாலைகள் மூடப்படும் அபாயம்!

image_pdfimage_print

பாடசாலை

இலங்கையில் மாணவர்கள் மத்தியில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் பரவி வருவதாக சுகாதார தரப்பு தெரிவிக்கின்றது.


கொவிட் தொற்றுக்குள்ளாகும் மாணவர்களின் எண்ணிக்கை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்குமானால், பாடசாலை கட்டமைப்பை மூடுவதற்கு நேரிடும் என பொரள்ளை ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவிக்கின்றார்.

மாணவர்களை பாதுகாத்து, பாடசாலை கட்டமைப்பை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதற்கு, பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.