அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை.! : தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்!!

image_pdfimage_print

தங்கம் விலை

தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தின் முதலீடு செய்து வருகின்றனர் .

உலக சந்தையில் தங்கத்தின் விலை பாரிய அளவு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதற்கமைய தங்கத்தின் விலை 1800 அமெரிக்க டொலரை எட்டியுள்ளதென குறிப்பிடப்படுகின்றது.

கடந்த வியாழக்கிழமை ஒரு அவுன்ஸ் விலை 30 டொலர் வரையில் அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் வெள்ளிக்கிழமை 23.30 டொலர் அதிகரித்துள்ளது.


அதற்கமைய வார இறுதியில் தங்கம் ஒரு அவுன்ஸின் விலை 1816.80 அமெரிக்க டொலர் வரை அதிகரித்துள்ளதாக உலக சந்தை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் வேலைவாய்ப்பு தரவுகள் உயர்ந்த போக்கைக் காட்டும் நிலையிலும் தங்கத்தின் விலை உயர்வு வருவதாக கூறப்படுகின்றது.