இலங்கையின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

சிவப்பு எச்சரிக்கை

இலங்கையில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கண்டி, கேகாலை மற்றும் குருநாகல் மாவட்டங்களுக்கும், பதுளை, கொழும்பு, காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கும் விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை இன்னும் செயலில் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாத்தளை, இரத்தினபுரி, கம்பஹா மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சிலாபம் – கொழும்பு வீதி மாதம்பே மற்றும் மஹவெவ பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள தாகவும், தினிப்பிட்டியவெவ மற்றும் கடுப்பிட்டிஓயாவின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.