இலங்கையில் மீண்டும் கொவிட் தொற்று அதிகரிப்பு – சுகாதார அமைச்சு

சுகாதார அமைச்சு


இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கைக்கு அமைய தொடர்ந்து தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


நேற்றைய தினம் 700 அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளரான வைத்தியர். ரஞ்சித் பதுவந்துடாவ தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இந்நிலைமையை கட்டுப்படுத்த பொது மக்கள் தொடர்ச்சியான சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிப்பது அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.