சுற்றுலா வந்த பிரான்ஸ் அழகி..காதலித்து கைப்பிடித்த ஆட்டோக்காரர் அதன்பின்னர் நடந்த சுவாரஸ்யம்!!!

பிரான்ஸ்

காதல் இரு மனங்களை மட்டுமே இணைக்கும் விசயம் இல்லை. அட் இருகுடும்பங்களையும் கூட இணைத்து விடுகிறது. அதேபோல் காதல் சாதி, மதம், மொழி, இனம் எதுவும் பார்ப்பதே இல்லை. அந்தவகையில் இங்கேயும் ஒரு காதல் அனைவரது கவனத்தையும் குவித்துள்ளது. இதுகுறித்துத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

இந்தியாவின் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் ரஞ்சித் சிங். படிப்பில் மிக சுமாரான இவர் 10ம் வகுப்பில் பெயில் ஆகிவிட்டார். இதனால் 16 வயதிலேயே ஆட்டோ ஓட்ட ஆரம்பித்தார். ஜெய்ப்பூருக்கு அடிக்கடி பாரினர்ஸ் சுற்றுலா வருவது வழக்கம். அவர்கள் மத்தியில் ஆட்டோ ஓட்ட வேண்டும் என்பதற்காக ஆங்கிலம் பேசக் கற்றுக்கொண்டார். அதைப் பயன்படுத்தி ஆட்டோ ஓட்டுனர் வேலையோடு சேர்ந்து, டூரிஸ்ட் கைடு ஆகவும் வேலையைத் தொடங்கினார்.

அப்படித்தான் தன் வருங்கால மனைவியையும் சந்தித்தார். பிரெஞ்சு நாட்டில் இருந்து தன் தோழிகளோடு வந்த அழகிக்கு கைடாக இருந்து ஜெய்ப்பூரை சுற்றிக்காட்டினார். சுற்றுலா முடிந்ததும் அந்த பிரெஞ்சு அழகியும் அவர் நாட்டுக்குப் போய்விட்டர், அதன் பின்னர் இருவரும் ஸ்கைபில் பேசியுள்ளனர். அப்போதுதான் காதலில் விழுந்ததை உண்ர்ந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் தன் ஆட்டோ காதலனைத் தேடி இந்த பிரெஞ்சு அழகி வந்தார். இந்த ஜோடியின் காதல் கடந்த 2014ம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது.

தொடர்ந்து அந்த ஆட்டோக்காரர் பிரெஞ்சு மொழியையும் கற்றுக்கொண்டு விசாவும் வாங்கினார். இப்போது இந்த ஜோடி ஜெனீவாவில் வசிக்கிறது. அங்குள்ள உணவகம் ஒன்றில் வேலைசெய்யும் ஆட்டோக்காரர் யூடியூப் சேனல் ஒன்றும் நடத்திவருகிறார். தன் வாழ்வில் சொந்தமாக ஹோட்டல் நடத்துவதுதான் லட்சியம் என அவர் நெகிழ்ச்சியோடு சொல்கிறார்.