பாடசாலையில் சக மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்! வாட்ஸப் ஸ்டேட்டஸ் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்..!!

பாடசாலையில் சக மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்!

கடந்த 3ம் திகதி அரசு பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படிக்கும் மாணவன் தன்னுடன் படிக்கும் சக மாணவியை திருமணம் செய்து கொண்டார். இதை மற்றொரு மாணவர் படம் பிடித்துள்ளார். தமிழகத்தின் குமரி-கேரள எல்லையான களியக்காவிளை அருகே உள்ள பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில் அந்த வீடியோவை அந்த மாணவி தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த பள்ளியில் இருந்த மற்ற மாணவர்கள் வீடியோவை டவுன்லோட் செய்து சக மாணவர்களுக்கு அனுப்பி வைத்தனர்.


பள்ளி மாணவன் சக மாணவிக்கு தாலி கட்டிய சம்பவம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இந்த சம்பவத்தை அறிந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பள்ளி தலைமையாசிரியரிடம் புகார் அளித்தனர்.

பளுகல் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையே பள்ளி நிர்வாகத்தினர் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியர் மற்றும் வாட்ஸ்அப் மூலம் தகவல் பரப்பிய மாணவியை அழைத்து விசாரணை நடத்தினர். இதையடுத்து 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனிடையே இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


நீண்ட இடைவேளைக்குப் பிறகு பள்ளி திறந்ததும், வித்தியாசமாகச் செய்ய நினைத்த சக மாணவனுக்கு தாலி கட்டிய விளையாட்டு, அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல். என்னை விட்டுவிடு, இனி இது போன்ற தவறு நடக்காது என பொலிஸாரிடம் மாணவன் கூறியுள்ளான். மாணவர்களின் எதிர்காலம் குறித்து பொலிஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.