கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்துவோருக்கான அறிவித்தல்

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை


கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் பேலியகொட இடைமாற்றிலிருந்து தற்போதுள்ள களனி பாலம் வரையான வீதி ஞாயிற்றுக்கிழமை (14) காலை 6.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை மூடப்படும்.

புதிய களனி பாலத்தின் நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருவதனால் இவ்வாறு வீதி மூடப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதனால் கொழும்பு – கண்டி வீதி (A1) மற்றும் கொழும்பு – நீர்கொழும்பு வீதியின் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வாகன சாரதிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.