நாட்டில் மீண்டும் உருவாகியுள்ள தாழமுக்கம்; காற்றுடன் கனமழை தொடரும்!!

image_pdfimage_print

இலங்கை


வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகில் நாளை 13ம் திகதி மாலையில் மீண்டும் ஒரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


யாழ்.பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா இதனை கூறியுள்ளார். இதன் காரணமாக அடுத்த இரு தினங்களுக்கு நாட்டில் காற்றுடன் கூடிய கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிற்கு கிழக்காக உள்ள ஆழம் கூடிய கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.