வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு!

image_pdfimage_print

வானிலை முன்னறிவிப்பு

நாட்டின் அனைத்து மாகாணங்களில் அவ்வப்போதுமழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காலி மற்றும் மாத்தறை பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அனுராதபுரம் மாவட்டத்தில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாடு முழுவதும் மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் 2021 நவம்பர்13ஆம் திகதி பிற்பகல் 04.00 மணிக்கு வெளியிடப்பட்டது.