இலங்கையில் ட்ரோன் கமராவை பறக்கவிட்டு பரபரப்பை ஏற்படுத்திய பெண்!

இலங்கை

அனுமதியின்றி ட்ரோன் கெமராவை செலுத்தி விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகாமையில் ஒளிப்பதிவு செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சந்தேக நபர்கள் நேற்று முன்தினம் (13) காலை விக்டோரியா நீர்த்தேக்கம் மற்றும் காலாட்படைப்பிரிவு முகாம் பகுதியில் அனுமதியின்றி பறக்கும் ட்ரோன் கெமராவை செலுத்தி ஒளிப்பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் இராணுவ அதிகாரிகள் தெல்தெனிய பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொதட்டுவ மற்றும் களனி பிரதேசத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் மூவரும் நேற்று (14) தெல்தெனிய நீதிவானிடம் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகக் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெல்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.