பாடசாலைகள் முழுமையாக திறக்கப்படுவது தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்!

image_pdfimage_print

தினேஷ் குணவர்தன

அரச பாடசாலைகளில் இதுவரையில் ஆரம்பிக்கப்படாதுள்ள வகுப்புகளை அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாடசாலைகளில் தரம் 6 முதல் 9 வரையான வகுப்புகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

ஏற்கனவே தரம் ஒன்று முதல் 5 வரையான வகுப்புகளும், தரம் 10, சாதாரண தரம் மற்றும் உயர்தர வகுப்புகளும் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.