வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்! சொந்த வாகனம் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி!!

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிப்பு

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஆறு முதல் ஏழு மாதங்களுக்கு நீடிக்க எதிர்பார்க்கப்படுவதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்துள்ளார்.


தற்போது வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை வழங்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் டொலர் கையிருப்பில் இல்லாததன் காரணமாக மார்ச் 2020 முதல் வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வாகனங்களின் விலை கடுமையாக அதிகரிக்கும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.