இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்; வழங்கப்பட்ட அனுமதி!

மொனுபிரவீர்

கொவிட் தொற்றாளர்களுக்கு வாய் வழியாக வழங்கப்படும் ‘மொனுபிரவீர்’ (molnupiravir)என்ற மருந்தை இலங்கையில் பயன்படுத்துவதற்கு, கொவிட்-19 தொழில்நுட்ப குழு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்யுகின்றது.


இத்தகவலை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். குறித்த மருந்தை இலங்கையில் பயன்படுத்துவதற்கான இயலுமை தொடர்பில் தான் கொவிட் -19 தொழில்நுட்ப குழுவிடம் கோரியிருந்ததாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில் , அதற்கு பதிலளிக்கும் வகையில் அக்குழு இதனைத் தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.