அரச அலுவலகம் சென்ற பெண்ணொருவருக்கு இப்படி ஒரு அவலநிலை!

இலங்கை

கொழும்பில் உள்ள அரச அலுவலகம் ஒன்றிற்கு சேவையை பெறச்சென்ற பெண் ஒருவருக்கு ஏற்பட்ட அவலநிலை தொடர்பிலான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பொதுவாகவே எமது நாட்டில் நாம் எந்த பிரிவு கிராமசேவையாளர் பிரிவில் வசிக்கின்றோமோ அதேபிரிவிலே தான் எமது அனைத்துப் பதிவுகளும் இருக்கவேண்டியது கட்டாயம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.

இந்நிலையில் கொழும்பு வெள்ளவத்தையில் வசித்துவந்த பெண்ணொருவர், பின்னர் தெஹிவல கிராமசேவகர் பிரிவிற்கு சென்று வாழ்ந்துவரும் நிலையில் தனது பதிவுகளுக்காக அலைக்கழிக்கப்பட்ட சம்பவமே இது.

அப்பெண்ணின் ஓய்வூதிய கோப்பை மாற்றுவதற்காக அவரது பிள்ளை, கிராமசேவகர் முதல் பிரதேச செயலகம் வரை சென்று நெடு நாட்களாக அலைந்து திரிந்தமை தொடர்பில் பதிவிட்டுள்ளார்.

கிட்டத்தட்ட மூன்றுமாதங்கள் இவ்வாறு தாயின் ஓய்வூதிய கோப்பை மாற்றுவதற்காக அவர் அலைகழிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. அந்த படிவம், இந்த படிவம், கிராமசேவகரிடம் கடிதம் என அலைகழிக்கப்பட்டு கடைசியில் கோப்பை மாற்றுவதற்காக சென்றபோது, அதெல்லாம் தேவையில்லை அம்மாவின் file transfer request letter ஒன்று போதும் என அந்த அதிகாரி கூறியதை கேட்ட அவருக்கு மயக்கமே வந்துவிட்டதாம்.

பாமர மக்களும் சரி, படித்தவர்களும் சரி ஓர் சேவையை பெற அரச அதிகாரிகளிடமோ அல்லது அரச அலுவலகங்களுக்கோ செல்கையில் அங்கு என்ன செய்வது என திண்டாடுவது வழக்கம் தான்.

அதோடு நீண்ட நாட்களாக அலைகழிக்கப்பட்டு மன உளைச்சலுக்கும் ஆளாகும் சம்பவங்களும் நடந்தேறியுள்ளன.

இந்நிலையில் அரச அதிகாரிகளும் , அரச அலவலகங்களும் மக்களுக்கு தேவையான விபரங்களை தெளிவாக அறிவிப்பு பலகையில் தேவையான விபரங்களை காட்சிப்படுத்துவதன் மூலம் மக்கள் இவ்வாறு அலைகழிக்கப்படுவதை தவிர்க்கலாம்.