சாரதியின் கவனயீனம் – இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!!!

இலங்கை


சம்மாந்துறை காவல்நிலைய பிரிவுக்கு உட்பட்ட காரைதீவு பிரதேச மாவடிப்பள்ளி பிரதான வீதியில் நேற்று (16) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வண்டு வீதி உடங்கா 02 சம்மாந்துறையைச் சேர்ந்த அஸ்ரப் முஹம்மது முனாஸ் (வயது-31) என்பவரே விபத்தில் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வெளிநாடொன்றில் பணிபுரிந்துவிட்டு அண்மையில் நாடு திரும்பியிருந்த இவரின் மரணம் சம்மாந்துறை மக்களிடையே கவலையை உருவாக்கியுள்ளது.

குறித்த நபர் வேலை நிமிர்த்தம் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளும், துவிச்சக்கர வண்டியும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், வாகனத்தை செலுத்தியவர்களின் கவனயீனமே விபத்திற்கு காரணமென சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்மாந்துறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.