வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த வாகனம் விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த பலர் தீவிர சிகிச்சைப்பிரிவில்!

விபத்து

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஹயஸ் ரக வாகனமொன்று விபத்திற்கு இலக்கானதில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

வவுனியாவிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த ஹயஸ் ரக வாகனம் கல்கமுவ பகுதியில் வைத்து சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து கனரக வாகனமொன்றுடன் மோதியுள்ளது.

விபத்தில் ஹயஸ் ரக வாகனத்தில் பயணித்த சாரதி உட்பட ஒரே குடும்பத்தினை சேர்ந்த ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்திற்கு இலக்கான இரு வாகனங்களும் கல்கமுவ பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.