மினி வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதல்.. ஐந்து பேர் பரிதாப பலி..!

இந்தியா

வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஐவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

00

ஈரோடு மாவட்டம் முத்துக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்த 8 பேர் பழனிக்கு சென்று இன்று வீடு திரும்பி கொண்டிருந்தனர். அவர்கள் வந்து கொண்டிருந்த போது பாரப்பாளையம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த சிமெண்ட் லாரி ஒன்று வேன் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில், வேனில் பயணித்த 4 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள் அருக்காணி, புவனேஸ்வரி, தேன்மொழி, தெய்வாணை மற்றும் ஓட்டுநர் படையப்பா என்பது தெரியவந்துள்ளது.