தினம் ஏன் பாதாம் சாப்பிட வேண்டும்.. பாதாம் தரும் அற்புத நன்மைகள்..!

பாதாம் தரும் அற்புத நன்மைகள்

பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பாதம் என்றால் பிடிக்கும். தினமும் பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என தெரிந்து கொள்வோம்.

புத்துணர்வு தரும்:

பாதாமை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் உடலுக்கு தேவையான ஊட்ட்சத்துக்கள் கிடைக்கும்., உடல் புத்துணர்வாக இருக்கவும் பாதாம் உதவும். இயற்கை மருத்துவத்தில் பாதாம் முக்கிய பங்கு வகிக்கிறது.

உடல் எடை :

உடல் ஈடி குறைவாக இருப்பவர்கள் தினம் பாதாம் சாப்பிட்டு வருவதன் மூலம் சீரான முறையில் உடலுக்கு தேவையான வலு கிடைக்கும். இதனால், உடலில் உள்ள தசைகள் பலம்பெறும்.

சர்க்கரை நோய் :

தினமும் ஊறவைத்த பாதாமை சாப்பிட்டு வருவதால் சர்க்கரை நோய் போன்ற நாள்பட்ட நோய்களை கட்டுபடுத்த உதவும் என ஆயூர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர்.

இளமையான தோற்றத்திற்கு:

தோலில் உள்ள செல்களை செழுமைப்படுத்தி இளமையான தோற்றத்திற்கு பாதாம் சாப்பிட்டு வரலாம். பாதாம் சாப்பிடுவதால் சரும அழகு மேம்படும்.