முகக்கவசம் அணிவது தொடர்பில் வெளியாகிய முக்கிய தகவல்!

image_pdfimage_print

தனியார் வாகனங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்! -பொலிஸ்


தனியார் வாகனங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என இலங்கை காவல்துறை  தெரிவித்துள்ளது.


முகக்கவசம் அணியாத தனியார் வாகனங்களில் பயணிக்கும் நபர்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை ஒன்றை பொலிஸார் இன்று முதல் ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸாரின் கூற்றுப்படி, மோட்டார் வாகனங்களில் பயணம் செய்பவர் நெருங்கிய உறவினர் இல்லை என்றால் அவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

அதேநேரம், நெருங்கிய உறவினர்களுடன் பயணம் செய்பவராக இருந்தாலும் ஓட்டுநர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இருப்பினும், உறவினரின் அடையாளம் உறுதி செய்யப்பட்டவுடன் வாகனம் ஓட்டிச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

பொலிஸாரினால் சோதனைக்கு உட்படுத்தும் அசௌகரியத்தை தவிர்க்கும் வகையில், வாகன ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் முகக்கவசம் அணிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.