யாழில் குடும்பத்தனரின் கடும் எதிர்ப்பின் மத்தியிலும் 44 வயது கனடா காதலனை கரம்பிடித்த இளம் யுவதி

image_pdfimage_print

யாழில்

19 வயதான யுவதியும், 44 வயதான முகநூல் கனடா காதலனும் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிகழ்வு கோப்பாய் பகுதியில் கடந்த வாரம் பெரும் களேபரங்களிற்கிடையில் நடந்துள்ளது.


குறித்த 19 வயதான யுவதி உயர்தரம் கற்றுக்கொண்டிருந்த போதே, கடந்த சில மாதங்களாக முகநூலில் காதலில் வீழ்ந்ததாக தெரிய வருகிறது. கனடாவில் வசிக்கும் சாவகச்சேரி பகுதியை சேர்ந்த 44 வயதுடைய நபர் ஒருவரை குறித்த யுவதி காதலித்து வந்துள்ளார்.

இதேவேளை, சில வாரங்களிற்கு முன் காதலன் சாவகச்சேரி வந்துள்ளார். இதை அடுத்து குறித்த யுவதி அவரது வீட்டில் காதல் விவகாரத்தை கூறினார். வீட்டில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த போது, கடந்த வாரம் வீட்டிலிருந்து இரகசியமாக வெளியேறி, முகநூல் காதலனின் உறவினர் வீடொன்றில் தங்கியிருந்தார்.


இந்நிலையில், இருவரும் திருமணம் செய்வது உறுதியான பின்னர், யுவதியின் பெற்றோர் எதிர்ப்பை கைவிட்டு, திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். தென்மராட்சியில் உள்ள கோவில் ஒன்றில் கடந்த வாரம் திருமணம் இடம்பெற்றுள்ளது.