வீதிகளில் உமிழ்பவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை!
நாட்டில் பெருந்தெருக்களில் எச்சில் உமிழ்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல்துறை அறிவித்துள்ளது.
காவல்துறை பாதுகாப்பு, ஜனாதிபதி செயலகத்தின் விசேட பணிகள் மற்றும் சுற்றாடல் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ரொஷான் ராஜபக்சவினால் காவல்துறை சுற்றுச்சூழல் பிரிவுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
தண்டனைச் சட்டக் கோவையின் பிரகாரம் இதுபோன்ற குற்றங்களைச் செய்பவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியும் எனக் காவல்துறை அத்தியட்சகர் ரொஷான் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வீதிகளில் வெவ்வேறு இடங்களில் எச்சில் உமிழ்வதால் சூழல் மாசுபடுவதுடன், கொரோனா அச்சுறுத்தலும் அதிகரிப்பதனைக் கருத்தில் கொண்டே இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.