வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு முக்கிய தகவல்!!!

image_pdfimage_print

தடுப்பூசி

வெளிநாடு செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய இலங்கையர்கள் வெளிநாடு செல்லும் சந்தர்ப்பத்தில் தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட சுகாதார பணியகத்தின் இயக்குனர் விசேட வைத்தியர் ரஞ்சித் பட்டுவன்துடாவ இதனை குறிப்பிட்டுள்ளார்.


பயணம் செய்யும் நாடு மற்றும் தேர்ந்தெடுக்கும் விமான சேவையை பொறுத்து தடுப்பூசி விதிமுறைகள் மாறுபடும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்