கடன் பிரச்சனையால் கசந்த காதல் திருமணம்… குழந்தைகளுடன் இளம்பெண் தற்கொலை..!

image_pdfimage_print

தமிழகம்


கடன் தொல்லையால் குழந்தைகளுடன் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் நாங்கூர் கன்னி கோயில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக். இவர் பாரதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். கார்த்தில் அந்த பகுதியில் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார்.

அவர் பல இடங்களில் கடன் வாங்கி வந்துள்ளார், சொந்தமாக இடம் வாங்கி, வீடு கட்ட வேண்டும் என பாரதி தனது கணவரிடம் கூறி வந்துள்ளார். ஆனால், கார்த்திக் கடன் மட்டும் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் கார்த்திக் வெளியூருக்கு வேலைக்கு சென்றுள்ளார்.

மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குழந்தைகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலைக்குன் எழுதிய கடிதம் சிக்கியது. அதில் , எங்கள் சாவுக்கு யாரும் காரணம் கிடையாது. நான் எங்கள் அப்பா அம்மாவை விட்டுவிட்டு வந்தது தவறு என எழுதப்பட்டுள்ளது.