தற்கொலை செய்து கொண்ட கள்ளகாதல் ஜோடி..  நிகழ்ந்த சோகம்..!

இந்தியா

திருமணத்தை மீறிய உறவால் இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி, பாரப்பட்டியைச் சேர்ந்தவர் ராமலட்சுமி. இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையில் அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பன்னீர் செல்வம் என்பவருக்கும் இடையில் திருமணத்தை கடந்த உறவு இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால், கடந்த சில ஆண்டுகளாக இரு குடும்பத்தினருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. இதனால், மனமுடைந்த ராமலட்சுமியும் பன்னீர் செல்வமும், மேலப்பாளையபுரம் கிராமத்திலுள்ள காட்டு பகுதியில் மதுவில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.

அவர்களை கண்ட மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் இரண்டு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.