போனை எடுத்தாலே பெண்ணிறக்கு வந்த ஆபாசபடங்கள்..பெண் எடுத்த அதிரடி முடிவு.!

சென்னை

ஒரு இளம் பெண்ணுக்கு ஒரே நபர் தொடர்ந்து ஆபாச படங்களை அனுப்பி தொல்லை கொடுத்ததால் அவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

சென்னை பெரம்பூரின் பெரவள்ளூர் அன்னை அஞ்சுகம் நகரில் 32 வயதான வாணி என்ற பெண் வசித்து வந்தார் .அந்த பெண்ணின் செல்போனுக்கு வாட்ஸ்அப்புக்கு அடிக்கடி ஆபாச படங்கள் வந்து கொண்டேயிருந்தன .இதனால் அவர் போனை ஆன் பண்ணவே அச்சம் கொண்டு போனை சுவிட்ச் ஆஃப் செய்து வைத்திருந்தார்.

அதன் பிறகு போனை ஆன் செய்த போது மீண்டும் ஒரே எண்ணிலிருந்து அதே போல பலான படங்களை அந்த நபர் அனுப்பிக்கொண்டேயிருந்தார் .இதனால் அந்த பெண் மிகவும் மன உளைச்சலானார் இது பற்றி சிலரிடம் கூறியபோது அவர்கள் அந்த பெண்ணை போலீசில் புகாரளிக்க ஆலோசனை வழங்கினர். இதனால் நேற்று முன்தினம், பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், குறிப்பிட்ட ஒரு எண்ணில் இருந்து எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்ச்சியாக ஆபாச வீடியோக்கள், படங்கள் வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்து இருந்தார்.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, அந்த செல்போன் எண் யாருடையது என விசாரணை நடத்தி வருகின்றனர்.