போன் தராத தங்கச்சி.. ஆத்திரத்தில் அக்கா செய்த பதறவைக்கும் சம்பவம்.!

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர் அருகில் பழனியம்மாள் என்ற 80 வயது மூதாட்டி தனது மகள்கள் வெங்கடேஸ்வரி, தமிழ்ச்செல்வி மற்றும் மகன் கிருஷ்ணமூர்த்தி மூவருடன் வசித்து வந்துள்ளார். நேற்று இரவு இரண்டு மகள்களும் தாய் வீட்டில் இருந்துள்ளனர்.

அப்போது தமிழ்ச்செல்வியிடம் அக்கா வெங்கடேஸ்வரி எனது மகனுக்கு கால் செய்ய வேண்டும் போனை குடு என்று கேட்டுள்ளார். ஆனால், தமிழ் செல்வி என்னுடைய போனில் பேலன்ஸ் இல்லை கால் செய்ய முடியாது என்று கூறி மறுத்துள்ளார். இது வெங்கடேஸ்வரிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

தமிழ்ச்செல்வி வீட்டிற்கு வெளியே கட்டில் போட்டு உறங்கியுள்ளார். அதிகாலை நேரத்தில் தாயிடம் வந்த வெங்கடேஸ்வரி, “என் மகனுடன் பேச செல்போன் கொடுக்காத தமிழ் செல்வியை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டேன். நீ என் பேச்சை கேட்டு நடந்து கொள் இல்லை. என்றால் உன்னையும் கொன்று விடுவேன்.” என்று மிரட்டியுள்ளார்.

அதிர்ச்சி அடைந்த தாய் ஓடிச்சென்று வெளியே பார்த்தபோது தமிழ்ச்செல்வி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பழனியம்மாள் கத்தி கூச்சலிட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

இதன் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் தமிழ்ச் செல்வியின் உடலை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு அனுப்பி வைத்து கொலை செய்த அக்கா வெங்கடேஸ்வரியை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். விசாரணையில் வெங்கடேஸ்வரி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கண்டறியப்பட்டுள்ளது.