அடுத்த வாரம் சீமெந்து விலை அதிகரிப்பு?

image_pdfimage_print

சீமெந்து பொதியின் விலையை அடுத்த வாரம், மீண்டும் அதிகரிக்க வேண்டி ஏற்படும் என சீமெந்து இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் டொலரின் பெறுமதி உயர்வு என்பன காரணமாக, சீமெந்து பொதியின் விலையை அதிகரிக்க வேண்டி ஏற்படுவதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, அதிகரிப்பட வேண்டிய தொகை குறித்து தீர்மானிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

50 கிலோகிராம் எடைகொண்ட சீமெந்து பொதி ஒன்று தற்போது 2,350 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு பாரிய அசௌகரியம் ஏற்படாதவாறு, இந்த விலை அதிகரிப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.