பிரதமர் மஹிந்தவின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்!

image_pdfimage_print

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டுக்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டை முற்றுகையிட்டு பெரும் எண்ணிக்கையிலானவர்கள் ஆர்ப்பாட்டத்திலீடுபட்டமையால் அங்கு பதற்றமான நிலை உருவாகியிருந்தது.

இதேவேளை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து ஆரம்பமாகி காலிமுகத்திடல் பகுதிக்கு செல்லவிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரின் ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸார் வீதித் தடைகளை ஏற்படுத்தி தடை விதித்திருந்தனர்.