இன்று நள்ளிரவு முதல் அவசரகால சட்டம் அமுல்!

image_pdfimage_print

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகால சட்டத்தை ஜனாதிபதி அமுல்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு பகுதிகளிலும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர் தற்போது அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.